Tuesday, October 25, 2011

இலட்சியம் நிச்சயம் வெல்லும்

இயற்கையாகவே உங்களிடம் உள்ள திறமைகள் என்னென்ன என்பதை அறிந்து அத்திறமைகளுக்குப் பொருத்தமான இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து முயன்று வருவீர்கள் என்றால் வெற்றியின் வெளிச்சம் உங்கள் மீது படும் நாள் வெகுதூரமில்லை. ஆம்! இலட்சியமும் இடைவிடாத முயற்சியும் இருக்குமென்றால் உங்களால் எதையும் சாதிக்க முடியும். .....................

வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்....

ஒன்றிலேயே குறி

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நோக்கம் எல்லாம் அதிலேயே இருக்க வேண்டும்.

24 மணி நேரமும் அந்தச் செயலைப் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் முன்னரே வெற்றிகொண்டவர்களின் முயற்சியைக் கணக்கிட்டுப் பார்த்தால் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் எத்தகைய கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியும்.நாம் செய்யும் முயற்சியின் அளவு எத்தகையது என்பதையும் கணக்கிட்டு நமது முயற்சியை அவ்வப்போது அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்த முயற்சி

பலரின் தோல்விக்கு தொடர்ந்த முயற்சியின்மை முதன்மையான காரணம் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். தொடக்கத்தில் மட்டும் முயற்சிஎடுத்துக் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்யாமலேயே தோல்வி கண்டவர்களே பலராவர்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …

* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் ....

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

தன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜ

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே
நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே
ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்...

விவேகானந்தரின் விவேக மொழிகள்

  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்........

வெற்றி உனக்குள்ளே! வெற்றி உனக்குள்ளே!

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.
1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை ....

Monday, October 24, 2011

Self Confidence - 10 Minute Hypnotherapy

Play this session whenever you need a confidence boost. The more you play - Youtube

வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள்

01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்

கெடுக்கும் காரியமாம் காதல்.

02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்

தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.

03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை

கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.

04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்

சென்று வருவது செல்வம்.

05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது

வேதனை இல்லாது வரமேது.

06. ஒன்றி முனையாத செயல் முடியாது

வென்றிட வேண்டும் விடாமுயற்சி.....

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி

தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தரம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக்..................

உங்கள் காலம் திருடப்படுகிறதா?

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம்................

சோதனையில் சாதனை

அர்துகான் - பாண்வின்பனை

விடாமுயற்சி - காணொளி

இந்தக் காணொளியானது வேடிக்கையாக இருந்தாலும், அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு..... ஏ அப்பா.... வணிகமயத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர் மத்தியில் இப்படியுமான மகாத்மாக்கள்!

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?

ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”

“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”

சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன ................

ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!

ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார்.

அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே ..........

ஒரு மாபெரும் வெற்றிக்கதை

கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் தந்தவர்கள் அதிலும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் பெருமளவு செல்வம் சேர்த்து ......

விடாமுயற்சி நமது துருப்புச் சீட்டு

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள்.....................

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.


விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. ......................

உலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.

வீடு இல்லாமல் தெரு தெருவாக சுற்றி கொண்டிருந்த, ஒரு பிச்சைக்கார வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன், தனது விடா முயற்சியாலும் தனது தன்னம்பிக்கையாலும் பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக் காரன் ஆனான் என சொல்லும் உண்மை கதை.

கிறிஸ் கார்ட்னர் என்ற ஒரு பங்கு வர்த்தக வியாபாரியின் சுயசரிதையான 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' என்ற புத்தகம் தான் பல மாற்றங்களுடன் திரைப்படமாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் படம் ....

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.


ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் ...

சலிப்படைந்தால் சாதனை இல்லை!

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் ..........

விதியை வென்ற விடாமுயற்சி

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை ....

குருவும் அவரது சீடர்களும்

கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,''உனக்கு என்ன தெரிகிறது?'''திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'குரு சொன்னார்,''சில நேரங்களில் அலைகளாய் இரு;சில நேரங்களில் கரையாய் இரு.''

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு. ......

மனம் மகிழுங்கள் - விடாமுயற்சி!


மிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்."

அதை ஏன் போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!

விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘.....