புதிய சாரதி
Sunday, November 20, 2011
சுறுசுறுப்பு வேணுமா
வழி1: தினமும் மூளைக்கு வேலை கொடுங்கள். புதிர், கணக்கு, குறுக்கெழுத்து, போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.
வழி2: தினமும் படிங்க. படிக்கிறது நிறைய புதுத் தகவல்களை தரும்.
வழி3: மூளையின் வலது அரைக்கோளப் பகுதியைப் பலப்படுத்துகிற சமாசாரம் இசையில் இருக்கு. நல்ல இசையை கேட்பது உணர்வு பூர்வமான அறிவாளியாக உங்களை உருமாற்றும்.
வழி4: தினமும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு தனியே அமர்ந்து உள்ளுக்குள் ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. மூளைக்கு உடனடியாக ஆக்சிஜன் பாய்ஞ்சு சடார்னு அது முழிச்சுக்கும். உங்க உடம்பு விழிப்புணர்வோட உஷாரா செயல்பட ஆரம்பிக்கும்.
வழி5: நல்ல சுகமா தூங்குங்க. தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. எட்டு மணி நேரம் போதும். "கும்பகர்ண பட்டம்' வேண்டாம் சரியா!
வழி6: நிறைய காற்கறிகளை சாப்பிடுங்க. முடிஞ்சா பச்சையாக சாப்பிடுங்க.
Sunday, November 13, 2011
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db5Me46G

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db5ojhcd
செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db68EMt9
இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db6Z8iFj
ஸமாநா ஸாமதேவீ ச ஸமஸ்த ஸுரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா
இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db6iwhLz
ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db71Etsm
வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db75G6Q5
நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7CyGQN
சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7IkKc5
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ
இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.
இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_08.html#ixzz1db7bz7BP
உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..

தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம் – டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்!
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்;நான் பிறந்தேன் கனவுடன் ;வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்தநான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்கநான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்தவழவே மாட்டேன்.ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
எண்ணங்கள் பிரம்மாக்கள்

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

"தன் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் அறிவாளி "
வெற்றிகரமான எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவுள்ள அடிப்படையான அத்தியாவசியமான குணம் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே .....
ஏனோ தானோ என்றோ அல்லது எப்போதோ மட்டும் தோன்றும் நம்பிக்கையை வைத்து உங்கள் குறிக்கோளை அடையவே முடியாது .
பொறுமை மிக மிக அவசியம் !
மீன் பிடிக்க செல்கிறவர்கள் , பெரிய மீனாய் வேண்டுமென்றால் , இரையை முள் கொக்கியில் கோர்த்துவிட்டு கரையில் பொறுமையாகத்தான் காத்திருக்க வேண்டும் .
எழுதும்பொழுதும் , திரும்ப திரும்பப் படிக்கும்பொழுதும் உங்கள் எண்ணங்கள் தெளிவடைகின்றன. அப்பொழுது உங்கள் லட்சியத்தை அடையும் வழிகள் உங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றன.
நீங்கள் விழிப்புணர்வுடன் ஆர்வத்தோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நெருங்க முடியும் .
எந்தத் தடையையும் , எதிர்மறை உணர்ச்சிகளையும் உங்களை நெருங்க விடாதீர்கள் .
சிந்தனைகளை சிதற விடாதீர்கள் .
நாம் நன்றாக இருக்கும் வரை நம் மனம் சரியான திசையில் சரியான சந்தர்ப்பத்தில் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
நீங்கள் செய்யப்போவதென்ன ?
ஒரு வெற்றியாளராக வேண்டும் என்றால் எந்தத் துறையானாலும் ,அத்துறையில் வெற்றி பெற்றவர்களின் பாதையை தொடருங்கள் .
அவர்களின் ஆலோசனையை பெறுவதற்கு எல்லா வகையிலும் முயன்று வெற்றிக்கனியை சுவைத்திடுங்கள் .
வெற்றியாளர்கள் சொல்வதை சந்தேகப்படாதீர்கள்.
வெற்றியாளர்களை சந்தேகப்பட்டு , அவர்களை தொடராது போனால் நஷ்டப்படப்போவது யார் ? முடிவு செய்து கொள்ளுங்கள் .
" எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் விழிப்பாக இருந்தால் போக வேண்டிய இடத்தை நிச்சயமாக அடையலாம்."
திட்டம் – கனவு – செயல் – வெற்றி
‘மூளை என்ற நுண்ணிய இயக்கம் கொண்ட, துடிப்பான செயலாக்கம் கொண்ட, வெற்றிப் பாதையில் செலுத்தக் கூடிய, உயரிய, விலைமதிப்பற்ற கருவியை நமக்கு படைத்தவன் பரிசளித்துள்ளான். அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் வெற்றிப்படிகட்டுகளில் ஏறுவதற்கு பதிலாக, படுத்துறங்கி கொண்டுள்ளனர் பலர்.
திட்டமிடுங்கள்
ஏன் வெற்றி பெற முடியவில்லை? நம்மிடம் என்ன, என்ன குறைபாடுகள் தடைக்கற்களாக உள்ளன. நம்மிடம் உள்ள நிறைகள் என்ன?
ஒரு தனித்தாளில் அவசியம் எழுதுங்கள். அலசுங்கள். சோம்.....................
கனவுகள் நினைவாக....
வெற்றிக்குப் பத்து வழிகள்!

Saturday, November 12, 2011
உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

எல்லாம் தகரும் தருணங்களில்....!
விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம்
* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்.
* இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். வரலாற்றைப் பார்த்தால் மனிதவளர்ச்சி இதனால் தான் உண்டாகிறது.
*மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத்தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.
* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.
* தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.
பின்னுங்க
Friday, November 11, 2011
வல்லமை தாராயோ…
திட்டமிட்ட இலக்கை நோக்கி அடுத்த பயணம். அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவது இடைவிடாமல் சிந்திப்பது. ஒன்றைத் தொடர்ந்து பார்க்கிற பார்க்கிற பார்வை கூர்த்த பார்வை. ஆழமாக அழுத்தி ஒன்றை மனதிற்கு சொல்லி விட்டீர்களென்றால் அது தொடர்பான விஷயம் எங்கோ ஓர் கூட்டத்திற்கு நடுவில் நடந்தால் கூட அதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
கூர்த்த பார்வை என்பது இலக்கை நிர்ணயித்து ஆழப்படுத்தி விட்டால் தானாய் வந்துவிடும். தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலேயே மிகப் பரந்த கூட்டத்திற்கு நடுவிலே கூட உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் உங்கள் கண் பார்க்கும். அதையே காதும் கேட்கும்.
துணிந்து நாம் எடுக்கிற முடிவு அந்தப் பாதையில் நாம் வைக்கிற முதல் அடி. அதுதான் முக்கியம். மனிதன் பெரிய பாறாங்கற்களால் இடறி விடுவதில்லை. பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன. அந்த சிறு தடைகளால் வருகிற பயம்தான் பெரிய தடையை கடக்கிறவரை நாம் பயணிப்பதே கிடையாது. முதலடி எடுத்து வைக்கிற துணிவு அந்த முதல் நம்பிக்கை வந்து விட்டதென்று சொன்னால் எதையுமே சாதிக்கலாம்.
துணிந்த தொடக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த இடத்தில்தான் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள். அவநம்பிக்கை அடைந்து விடுகிறார்கள்.
தொடரும் முயற்சி எப்படி வருமென்று கேட்டால் பெரிய விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டால் மனது அதையே பூதாகரமாக கற்பனை செய்து கொண்டிருக்கும். அடையும் இலக்கின் பரிமாணத்தை மனது எண்ணி யெண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தளர்ச்சி வரும், தடை வரும், எதிர்ப்பு வரும், எதிர்மறை சிந்தனைகள் தலையெடுக்கும். அதை உதறி எறிந்துவிட்டு போக வேண்டு மென்றால் இலக்கின் பரிமாணத்தை சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இலக்கை நோக்கிய பயணத்தை ஒரே மூச்சில் போகிற பயணமாக முடிவு செய்யக் கூடாது. அதை சிறுசிறு பகுதியாக இன்றைக்கு இதை செய்ய வேண்டும். நாளைக்கு அதை செய்ய வேண்டும் என்று அதை உடைத்து சிறியதாக மாற்றுகிற போது மனதிலிருக்கிற அச்சம் நம்மை விட்டுப் போகும். உங்கள் முன்னால் வைக்கப் படுகிற தடைகளை நீங்கள் துணிந்து கடப்பதற்குரிய நம்பிக்கையை அது உங்களுக்குத் தரும். இன்னும் சொல்லப்போனால் அது வெற்று விமர்சனங்களையும் வேண்டாதவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளையும் இந்தப் பயணத்தின் இந்த நேரத்தில்தான் வந்து சேரும். வேண்டாத விமர்சனங்கள் வரும். இவன் இதைச் சாதித்து விடுவானா என்ற குரல் நம் காதிலே கேட்கும். விமர்சனங்களால் விழுந்து போகாத இதயத்தை வசப்படுத்திக் கொள்கிறானோ எந்த மனிதனுக்கு அது வாய்க்கிறதோ அவன் சாதனையாளனாக முடியும். விமர்சனங்கள் வராத மனிதன் கிடையாது. வந்தே தீரும். தொடர்ந்த முயற்சியில் அந்தத் தடையை தாண்டிச் செல்கிறபோது மனது தளரும். பாதையில் தடை வருகிறபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடலிலிருந்து நீரை முகர்ந்து முகர்ந்து மீண்டும் மழை பொழிவதைப்போல மீண்டும் நம்பிக்கை எனும் நீரை முகர்ந்து முகர்ந்து இதயத்தில் பாய்ச்ச வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
வருகிற தடைகள் அவை தருகிற துன்பங்கள் நமக்கு வருகிற தளர்ச்சி அவை அத்தனையும் நீங்கிப் போகும். ஏனென்றால் இலக்கும் சரியாக இருந்து அதைப் பற்றிய எண்ணமும் சரியாக இருந்து போகிற அந்தப் பாதையில் கால் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டால் எதுவும் தடையாகத் தெரியாது. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கும். இலக்கை தீர்மானித்துவிடலாம். ஆனால் இலக்கை நோக்கிப் பயணிக்கிற கால அளவை மட்டும் நம்மால் தீர்மானிக்கமுடியாது. வெற்றிக்கு நாம் தீர்மானம் செய்த காலம் கொஞ்சம் நீட்டிக்கலாம். இரண்டு வருடத்தில் முடிக்கலாம் என்று நினைத்தது மூன்று வருடமாகலாம். அல்லது முயற்சியின் காரணமாக முன்கூட்டியே கூட முடிவைத் தந்துவிடலாம். எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். காலையிலிருந்து எத்தனை பேரிடம் வளவளவென்று பேசிமுடித்து அவர்களும் சலித்து போய் நாமும் சலித்து எழுந்து விடுகிறோம். அந்த நேரம் எதற்குரிய நேரம். எத்தனை பெரிய காரியங்களை ஆற்றுவதற்குரிய நேரத்தை எப்படி தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிற சிந்தனையை வளர்த்துக் கொண்டோமேயானால் சாதனைகள் தொடர்ந்து வரும்.
நம்மால் முடியும் என்று நம்மை வலியவனாக எண்ணிப் பார்க்கிற கற்பனை வருகிறபோது அது வலிமையைத் தரும். இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கை பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கின் பரிமாணத்தை எளிதாக கற்பனை செய்கிற இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உந்தும் சக்தியாக உங்கள் உள்மன உரையாடல்கள் உங்களை வலிமையுடையவர்களாக ஊக்கப் படுத்துகிற அதே வேளையில் நீங்கள் சென்று சந்திப்பதாக நீங்கள் அடைய விரும்பியதாக எதை நீங்கள் தீர்மானமாக இலக்காக வைத்திருக்கி றீர்களோ அந்த இலக்கின் பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நீங்கள் பழகிக் கொண்டால் எளிதாக முடியும்.
வெற்றியின் ரகசியம்
10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?
அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.
லட்சியம்
உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
முயற்சி
நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
கற்றுக்கொள்ளுங்கள்
படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.
உழைப்பு
லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.
தெளிவுறுங்கள்
லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
குறுக்கீடு
உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.
தனித்துவம்
உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.
கலந்தாய்வு
எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.
பொறுப்பேற்பு
எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.
எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.