Saturday, November 12, 2011

பின்னுங்க

தங்கள் துறை மீதான தீராத காதல், தங்கள் துறையில் உயர்ந்த இடத்தை அடையும் வெறி, அந்த இடத்தை அடையும் வரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத உழைப்பு. இதெல்லாம் உங்களிடம் இருந்தால் இன்சூரன்ஸில் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்தான்.

வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை செயல் படுத்துவதில்லை. தெரியும் என்பதை செயலாக மாற்றுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
இன்றைக்கு பலர் படிகளில் ஏறி மேலே செல்ல விரும்புவதில்லை. எஸ்கலேட்டரில் போவது போல முதல் படியில் காலை வைத்தவுடன் மேலே போய்விட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அதற்கு எதாவது டிரிக்ஸ் இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளத்தான் விரும்புகிறார்கள். காரணம் எத்தனையோ வெற்றிகளை, வெற்றியாளர்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு பின்னால் உள்ள உழைப்பை, உணர்வை நம்மால் பார்க்க முடிவதில்லை.

உழைத்தால்தான் உயர்வு என்பது புரிகிறது. ஆனால் உழைக்க முடியாதபடி மனம் அவ்வப் போது சோர்ந்து போய் விடுகிறதே. எப்போதும் உற்சாகமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?

இலக்கே வெற்றி.
நம்ம நிலமைக்கு தகுந்த மாதரிதான் ஆசைப்பட வேண்டும். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை’ என்பது அவர்களின் கொள்கை. இதில் புரிந்து கொள்ள வேண்டியது, எள்ளுருண்டையை மட்டுமே ஆசைப்படுவதால் தான் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம் என்பதுதான்.

உயர்ந்த இலக்குகள்தான் மனிதனுக்கு தீராத உற்சாகத்தை தருகிறது.
உயர்ந்த இலக்குகள் உயர்ந்த எண்ணங்களை தோற்றுவிக்கிறது. உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த செயல்களை தோற்றுவிக்கிறது. உயர்ந்த செயல்கள் பெரிய வெற்றியை தருகிறது. ஆக, இலக்குகளே வெற்றிகளாக மாறுகிறது.


No comments:

Post a Comment