Friday, November 11, 2011

சாதிக்கலாம் வாங்க

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

‘மோதுங்கள், பயத்துக்கு எதிராக மோதுங்கள்’...

ஒரு இலட்சியத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதை நோக்கி ஒட்டுமொத்த உழைப்பையும் செலுத்தினால்தான் வெற்றி நிச்சயம்.

“எல்லா விசயங்களிலும் அப்டேட்டாக இருங்கள். பிரிமினரி தேர்வுக்கு NCERT Book-ஐ படியுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யுங்கள். மற்றவரின் கட்டாயத்திற்காகவும், எளிமையாக இருக்கிறது என்பதற்காகவும் தேர்வு செய்யாமல் உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்யுங்கள். எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக
இருங்கள். இல்லையென்றால் நீங்கள் எல்லாப் பாதைகளிலும் பயணிக்க முயலுவீர்கள். அது உங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தும். நன்றாகத் திட்டமிடுங்கள். சிறிதளவும் அதிருந்து விலகாதீர்கள். உங்கள் லட்சியம், திட்டம், முயற்சி, உழைப்பு எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துங்கள்.

சவால்தான் வாழ்க்கையின் அடிப்படை. பெரிதாகக் கனவு காணுங்கள். அதன்பிறகு அந்தக் கனவை நனவாக்குவது எப்படி எனத்திட்டமிட்டு, விடாமுயற்சியோடு கடுமையாகவும், மன உறுதியுடனும் உழைத்தால் உலகில் முடியாதது எதுவுமில்லை. முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன் என்னால் முடிந்தது உங்களாலும் நிச்சயம் முடியும்.

No comments:

Post a Comment